Pachai Mayil Vaahanane lyrics in Tamil Pdf free Download Here. Pachai Mayil Vaahanane Lyrics in Tamil PDF is a beautiful devotional hymn dedicated to Lord Murugan, cherished by devotees for its deep spiritual meaning and melodious verses. This song is widely sung during Murugan poojas, festivals, and bhajans, bringing peace and devotion to the heart of the listener. In this post, you can read the complete பச்சை மயில் வாகனனே song lyrics in Tamil and also download the Tamil lyrics PDF for easy offline reading, chanting, and daily worship. Whether you are a devotee, singer, or learner, this PDF will be very useful for your spiritual practice.
முருகப் பெருமானின் அருளைப் போற்றும் உன்னதமான பக்திப் பாடல் ‘பச்சை மயில் வாகனனே’. மனதிற்கு அமைதியையும், பக்தியையும் தரும் இந்தப் பாடல் முருகப் பெருமானின் வழிபாடுகள், திருவிழாக்கள் மற்றும் பஜனைகளில் மிகவும் பிரபலமானது.
இந்தத் தொகுப்பில் நீங்கள் காண்பவை:
- முழுமையான வரிகள்: இந்தப் பாடலின் தெளிவான தமிழ் வரிகளை இங்கே படிக்கலாம்.
- இலவச PDF பதிவிறக்கம்: ஆன்மீகப் பயிற்சி, தினசரி வழிபாடு மற்றும் பாடிப் பழகுவதற்கு வசதியாக, இந்தத் தமிழ் வரிகளை நீங்கள் PDF கோப்பாக இலவசமாகப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
முருக பக்தர்களுக்கும், இசை கற்பவர்களுக்கும் பயனுள்ள வகையில் இந்தப் பக்கம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
Pachai Mayil Vaahanane lyrics
பச்சை மயில் வாகனனே சிவ
பால சுப்பிரமணியனே வா – இங்கு
இச்சை இல்லாம் உன்மேல் வைத்தேன்
எள்ளளவும்ஐயமில்லை –
கொஞ்சும் மொழியானாலும் – உன்னைக்
கொஞ்சிக் கொஞ்சிப் பாடிடுவேன் – இங்கு
சர்ச்சை எல்லாம் மறைந்ததப்பா – எங்கும்
சாந்தம் நீறைந்தப்பா – (பச்சைமயில்)
வெள்ளமது பள்ளந்தனிலே பாயும்
தன்மை போல உள்ளந்தனிலே – நீ
மெள்ள் மெள்ள புகுந்து விட்டாய் எந்தன்
கள்ளமெல்லாம் கரைந்ததப்பா – (பச்சைமயில்)
நெஞ்சமதில் கோவில் அமைத்தேன் அதில்
நேர்மை என்னும் திபம் வைத்தேன் – நீ
செஞ்சிலம்ப கொஞ்சிட வா மருகா
சேவற் கொடி மயில் வீரா – (பச்சைமயில்)
ஆறுபடை வீடுடையவா எனக்கு
ஆறுதலைத் தருந் தேவா – நீ
ஏறுமயில் ஏறிவருவாய் – முருகா
எங்கும் நீறைந்தவனே- (பச்சைமயில்)
அலைகடல் ஓரத்திலே எங்கள்
அன்பான சண்முகனே – நீ
அலையா மனந் தந்தாய் – உனக்கு
அனந்த கோடி நமஸ்காரம் – (பச்சைமயில்)